வவுனியாவில் தனியாக நின்ற ஆசிரியை மீது பாலியல் மற்றும் கொலை முயற்சி!

வவுனியாவில் ஆசிரியை மீது துஷ்பிரயோகம் மற்றும் கொலை முயற்சி. வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக காத்திருந்த ஆசிரியை ஒருவர் மீது இளைஞன் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று (06.03.2017) காலை 6.30 மணியளவில் வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஆசிரியை மீது அப்பகுதிக்கு திடீரென வந்த இளைஞன் ஒருவர் ஆசிரியை மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்ததுடன் கொலை முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும்ஆசிரியை அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததையடுத்து குறித்த இளைஞன் ஆசிரியை மீது கண்மூடி தனமாக தாக்குதலை மேற்கொண்டதுடன், கடித்து குதறியும் உள்ளான் அதன் பின் யாரும் காணாதவாறு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளான் கூக்குரல் சத்தம் கேட்டதையறிந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட ஆசிரியையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் .

குறித்த நபர் மட்டக்களப்பை வதிவிடமாக கொண்டவன் எனவும் ஆசிரியரை ஒருதலையாக பட்சமாக காதலித்து வந்துள்ளான் எனவும் அறியப்படுகின்றது.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like