வவுனியாவில் சீராக மின்சார பட்டியல் கிடைக்காமையினால் பாவனையாளர்கள் சிரமம்!

வவுனியாவில் மாதாந்தம் சீராக மின்சார பட்டியல், மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மின்சார பட்டியல் சீராக மாதாந்தம் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் குறித்த மின்மானி வாசிப்பு தொகையை விட அதிகளவான நிதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாதத்தின் முதலாம் திகதியில் மின்மானி வாசிப்பு எடுக்கப்பட்டு மின்சார பட்டியல் வழங்கப்படும் பட்சத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி மானி வாசிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு மின்மானி வாசிப்பு மேற்கொள்ளப்படுமாக இருந்தால், குறித்த பாவனையாளர் ஒரு மாதகாலத்தில், தான் பயன்படுத்திய மின்மானிக்கான பணத்தினை செலுத்த முடியும் என்பதுடன் கட்டணம் குறைவாக காணப்படும் சந்தர்ப்பம் உள்ளது.

எனினும் அவ்வாறு மேற்கொள்ளப்படாது ஒரு வாரம் கழித்து மானி வாசிப்பு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் குறைந்த கட்டணத்திற்கான மானி வாசிப்பையும் மீறி அதிகளவான கட்டண எல்லைக்குள் மானி வாசிப்பு சென்றுவிடும்.

எனவே மாதாந்தம் மின்மானி வாசிப்பு பார்க்கப்பட்டு மின்சார பட்டியல் வழங்கப்படுமாயின், மின்பாவனையாளர்கள் தமக்கான மின்பாவனை கட்டணத்தினை குறைந்த கட்டணத்தில் செலுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டினர்.

You might also like