சம்பளமின்றி பணி புரிந்த இலங்கைப் பணிப்பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்

குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

குறித்த இலங்கைப் பெண் சம்பளம் இன்றியே குவைத்தில் பணி புரிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பணத்தை சேமித்து வைத்து தருவதாக கூறிய முதலாளி, நான்கு வருடங்களாக இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளார். சம்பளம் வழங்க மறுத்தமையால் குறித்த பணிப்பெண் அந்நாட்டில் செயற்படும் இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்தார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடை தொடர்ந்தே குறித்த முதலாளி இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 3300 தினார் பணம் செலுத்துவதாக குவைத் நாட்டு பெண் உறுதியளித்துள்ளார்.

இலங்கைப் பணிப்பெண் தாய் நாட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்த போதே அவரது சம்பளம் மறுக்கப்பட்டது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like