கர்ப்பிணி பெண்ணை கொடுமை படுத்திய பஸ் : அரசாங்கம் எடுத்த முடிவு!

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவரை கொடுமைப்படுத்திய சாரதியின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணி பெண் சுகயீனமடைந்த நிலையில் தனது தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பஸ்ஸில் வாந்தி எடுத்துள்ளார். பஸ்ஸின் நடத்துனராக கடமையாற்றிய உரிமையாளர், மீரிகம நகரத்தில் வைத்து பஸ்ஸை சுத்தப்படுத்துமாறு கர்ப்பிணி பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார்.

தனது தாயாரின் உதவியுடன் பஸ்ஸினை பெண் சுத்தப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலை செல்லும் நடவடிக்கையும் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் பின்னர் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலேயே அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

You might also like