வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்வட்ட வீதியினை செப்பனிட்ட பணிப்பாளர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்வட்ட வீதி கடந்த 27.07.2018ம் திகதி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுடன் இணைந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் அவர்களும் தார் ஊற்றி செப்பனிட்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சரின் அனுசரனையுடன் 12 மில்லியன் நிதியில் அமைக்கப்பட்ட இவ் வீதி செப்பனிடும் பணிக்கு வெளி பணியாளர்கள் பயன்படுத்தாது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுடன் இணைந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் பணியாற்றியமை பலரின் உள்ளங்களின் இடம்பிடித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

உள்வட்ட வீதி செப்பனிடும் பணிக்கு சுகாதார உதவியாளர்கள் ஆகிய நாங்கள் பணிபுரியும் சமயத்தில் தனது அறையில் அமர்ந்து கொண்டு மாத்திரம் பணியாற்றாது எம்முடன் ஒரு நண்பராக சேர்ந்து தார் ஊற்றி செப்பனிட்டமைக்கு வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் இவ் பணிக்கு வெளி பணியாளர்களை உட்படுத்தாது நாங்கள் களத்தில் இறங்கி பணியாற்றினோம் என தெரிவித்தனர்.

You might also like