வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (30.07.2018) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இ.போ.ச பேரூந்து முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் புதூர் சந்திக்கு அருகாமையில், புளியங்குளம் இந்துக்கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியுடன் இ.போ.ச. பேரூந்து மோதியதில் 9 மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏழு வயதுடைய ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேரூந்தானது அதே திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச. பேரூந்து முச்சக்கர வண்டியை மோதி தள்ளியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 

You might also like