துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த மாணவர்களின் நினைவு : யாழில் இளைஞர் யுவதிகளின் செயற்பாடு

பொலிஸாரின் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக யாழ். பல்கலையில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன் நினைவாகவே இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொதுக்கட்டடத் தொகுதியில் கலைப்பீட ஒன்றிய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் அதிகளவில் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியிருந்தனர். மேலும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என இதன் போது மாணவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like