நான்காவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி 2017.03.04 காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இதுவரை அரசிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வவுவதாக அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இதற்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like