கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளரும், செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வின்சன் பத்திநாதன், உறுப்பினர் எஸ்.இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மேகலை மதன் ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

புதிய அரசயலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்கள், அதன் மீதுள்ள நம்பகத்தன்மை, அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை ஈடுசெய்யுமா போன்ற கேள்விகளையும் முன்வைத்தனர்.

You might also like