உயிருடன் ஊசலாடும் யுவதி! கருணை உள்ளம் படைத்தோர் கவனத்திற்கு….!

யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்றுவரும் யுவதி ஒருவர் தனது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான நிதியுதவியினை உதவி செய்யும் தயாள உள்ளம் படைத்தோரிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.

அராலி மேற்கைச் சேர்ந்த ரிலைக்சனா இரத்தினராசா (வயது-21) என்ற யுவதியே தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு அதிவிரைவில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இவரது இரத்தப் பிரிவு- O+ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளதால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள கருணையுள்ளம் படைத்தவர்களிடமிருந்து நிதியுதவி மற்றும் சிறுநீரக உதவி கோருகின்றார்.

அவரைத் தொடர்புகொள்ளவேண்டிய முறை பின்வருமாறு,

அவரது வங்கிக் கணக்கு இலக்கம்- 8239005448

Rathinarasa Tilaxsana (கொமர்ஸல் வங்கி, சங்கானைக் கிளை)

TP NO- 077 3013 339

இந்தச் செய்தியைப் படிப்போர் தவறாமல் உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள். பிறர் உயிர் காக்கும் புண்ணியப் பணியில் உங்களையும் இணைத்திடுங்கள்!

You might also like