அமைச்சர்களின் வாகனக் கொள்வனவுக்கு இத்தனை கோடி ரூபாய்கள்! அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர்

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 49 கோடியே 49 இலட்சத்து 62 ஆயிரத்து 790 ரூபாவைக் கோரும் குறைநிரப்புப் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

7 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர் ஒருவருக்குமே வாகனம் கொள்வனவு செய்வதற்குரிய நிதியைக் கோரி ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறித்த குறைநிரப்பு பிரேரணையை  சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி அமைச்சுகளுக்குக் கோரப்பட்டுள்ள நிதித் தொகை வருமாறு,

விசேட செயற்றிட்டங்கள் அமைச்சருக்கு – 4,26,00,000 ரூபா, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருக்கு 4,20,00,000 ரூபா, நீர்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவம் அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் – 8,60,00,000, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருக்கு 4,10,00,000 ரூபா, சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சருக்காக 4,30,00,000, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு 4,30,00,000, நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சருக்கு 4,30,00,000 ரூபா.

அதேவேளை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 4,25,48,000 ரூபாவும், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சருக்கு 4,30,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு 3,13,41,250 ரூபாவும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவருக்கு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 3,74,73,540 ரூபாவும் இந்தக் குறைநிரப்பு பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்துக்கான 25 டபள் கெப் வாகனங்களுக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கான வாகனம் ஒன்றுக்கும் குத்தகை கூலிக்காக நிதி ஏற்பாடுகளை மேற்கொள்வதன் நிமிர்த்தம் 6 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவைக் கோரியும் குறைநிரப்புப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like