வடக்கில் பன்றிக் காய்ச்சல்? எச்சரிக்கையாக செயற்படுங்கள்! சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

வடக்கில் ஏனைய மாவட்டங்களை விட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிளவிலான பற்றிக் காய்ச்சல் உணரப்பட்டுள்ளதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறும் மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாணத்தில் பன்றி காய்ச்சல் தாக்கம் உணரபட்டிருக்கும் நிலையில், பன்றி காய்ச்சல் தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

மக்கள் வருமுன் காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சல் வந்தால் உடனடியாக பெரிய வைத்தியசாலைகளுக்கு அல்லது மக்கள் அதிகளவில் கூடும் வைத்திய சாலைகளுக்கு செல்வதை தவிருங்கள். அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் ஆலோசனையை பெறுங்கள். பின்னர் பெரிய வைத்திய சாலைக்கு செல்லும் தேவை இருந்தால் செல்லுங்கள்.

இதேபோல் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் கைகளை நன்றாக கழுவுங்கள். அதிகம் மக்கள் கூடும் இடங்ளுக்கு செல்வதை தவிருங்கள். குறிப்பாக குளிரூட்டப்பட்ட இடங்குளுக்கு செல்வதை தவிருங்கள்.

இதேவேளை, இதுவரை ஒரு மரணம் மட்டுமே சந்தேகத்திற்கு இடமான முறையில் நிகழ்ந்துள்ளது. அதுவும் பன்றி காய்ச்சலால் தான் நிகழ்ந்தது என உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

You might also like