சற்றுமுன் வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து குழந்தை பரிதாபமாக பலி

இன்று (08.03.2017) மதியம் 11.30மணியளவில் லக்ஸ்மன் வீதி காத்தார் சின்னகுளம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக பலி

மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

இன்று மதியம் பலியான குழந்தையின் தந்தையார் வேலைக்கு சென்றிருந்ததாகவும் தாயார் சுயவேலை காரணமாக நகரத்திற்கு சென்றிருந்த வேளை குழந்தை தனது அம்மம்மாவுடன் வீட்டில் தனியாக இருந்த வேளை குழந்தை விளையாடி கொண்டிருந்ததாகவும் இவ்வேளையிலேயே குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியானதாகவும் அறியப்படுகிறது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மாணிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like