ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதற்கு தடையா.?

எதிர்காலத்தில் ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெள்ளை நிறத்திலான சிகரெட் பொதி அட்டைகளை அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியை பெறுவதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புளத்சிங்கள, ரெட்டியல பாடசாலையில் இடம்பெறும் மருத்துவ முகாமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

You might also like