வவுனியாவில் ஊருக்கு ஒரு கோடி சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான ஆலோசணை கூட்டம்

ஊருக்கு ஒரு கோடி சிரமசக்தி வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்து இளைஞர் கழகங்களுக்கான செயற்பாடு முன்னேடுப்பதற்கான ஆலோசணை வழங்கும் கூட்டம் வவுனியா பிரதேச சம்மேளனத்தின் மூலமாக பிரதேச செயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் , வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா , இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவர் அருளானந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தொடரில் உரையாற்றிய வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா ,

இளைஞர்களின் தலைமைத்துவம் தாங்குகிற பண்பினை பாராட்டுவதோடு மக்களுக்கு பயன்படுகின்ற இவ் திட்டத்தினை சிறப்பாக கொண்டு செல்ல தன்னால் முடிந்த சமூக பங்களிப்பை செய்வதாகவும் தெரிவித்தார்.

சிரமசக்தி வேலைத்திட்டத்தில் வெற்றி பெறுகின்ற திட்டங்களுக்கு மாவட்ட அடிப்படையில் 500000, 400000, 100000 பரிசும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like