வவுனியாவில் வேலை வேண்டுமா ? : உடனே பதிவினை மேற்கொள்ளுங்கள் !

வவுனியா வர்த்தக சங்கத்தினூடாக வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உடனடியாக  இன்றே பதிவுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தக சங்கத்தினால் வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றுமொரு சேவையாக வேலைவங்கி எனும் ஒரு தொனிப்பொருளில் ஒர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான உங்கள் நிறுவனத்திற்கு தேவையான சகல விதமான ஊழியர்களையும் வர்த்த சங்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் மிக முக்கியமாக வேலை தேடுபவர்கள் வர்த்தக சங்கத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அவ்வாறே வர்த்தகர்கள் உங்களுக்கு தேவையான ஊழியர்கள் தொடர்பான விபரங்களை எம்மிடம் பதிவு செய்வதன் மூலம் இருவரது தேவைகளையும் பூர்த்தி செய்வது இலகுவாக அமையும்.

எனவே உங்களது பதிவுகளை முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள எமது வர்த்தக சங்கத்தில் இன்று முதல் மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார்.

You might also like