வவுனியாவில் உணர்ச்சிவசத்தில் கண்ணீர் விட்ட பொலிஸ்மா அதிபர்

வவுனியா மாவட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னஞ் சோலை திட்டத்தின் போது பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உணர்ச்சி மேலீட்டினால் கண்ணீர் விட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா- மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் 100 தென்னங்கன்றுகள் நடும் தென்னஞ்சோலை திட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்கள் கலந்து கொண்டு தென்னஞ்சோலை திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பொலிஸாரின் செய்பாடுகளுக்கு வவுனியா, மன்னார் மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு குறித்தும், சமுதாய பொலிஸ் குழுவின் செயற்பாடு மற்றும் வவுனியா – மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தல் குறித்தும் பெருமிதம் கொண்ட பொலிஸ் மா அதிபர் உணர்ச்சி மேலீட்டினால் ஆனந்த கண்ணீர் விட்டார்.

இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் சுஜன், வர்த்தக சங்க உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், மாணவர்கள், நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like