வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள்: ஒருவர் கைது

வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரப்பகுதி ஒன்றைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுகளையுடைய மாணவிகள் இருவர் பூந்தோட்டம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர்.

கடத்தப்பட்ட இருவரும் சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து அன்றைய தினம் மாலை தப்பித்திருந்தனர்.

இதனைடுத்து அவர்கள், அலரி விதை உட்கொண்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் வவுனியா, சிறிராமபுரம் பகுதியை சேர்ந்த இளைஞரொருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like