பூர்வீக நிலத்தில் குடியேற்றுமாரு கோரி கிளிநொச்சியில் போராட்டம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமது பூர்வீக மண்ணில் நிரந்தரமாக குடியேற்றுமாறு கோரி குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது,

பூநகரி மகாவித்தியாலய சந்தியிலிருந்து பூநகரி பிரதேச செயலகம் வரை அமைதி பேரணியாக சென்ற மக்கள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றினை பூநகரி பிரதேச செயலாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like