வவுனியாவில் தொழிநூட்ப கல்லூரிக்கு சென்ற பெண்ணை காணவில்லை

வவுனியாவில் நேற்று (07.03.2017) தொழிநூட்ப கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளத்திலிருந்து நேற்று (07.03.2017) காலை 8.30மணிக்கு தொழிநூட்ப கல்லூரிக்கு சென்ற 20வயதுடைய பெண் மாலை 5.30மணி ஆகியும் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like