வவுனியாவில் வன்னிபிரதிப் பொலிஸ்மா அதிபரை கண்கலங்க வைத்த தாயார்

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் சேவையை பாராட்டியும், மதிப்பளிக்கும் முகமாகவும் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில்  பிரியாவிடை நிகழ்வு இன்று (07.08.2018) இடம்பெற்றது.

இதன்போது மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் பொலிசாரின் பங்களிப்புடன் அண்மையில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

இன்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த தாயார்,

வன்னிபிராந்தியத்தில் பல மக்களுக்கு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபரினால் எனது பிள்ளைகளின் நலனுக்காக வீடு ஒன்று அமைத்துக் கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரை எனது மகனுக்குச்சமனாகவே என்னால் நினைத்துப்பார்க்க முடிந்துள்ளது. இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை எனக்குச் செய்து தந்துள்ளார். எனத் தெரிவித்தபோது வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா கண்கலங்கியதுடன் குறித்த தாயார் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் கலாச்சார மண்டபத்தில் கூடியிருந்தவர்களின் மனதுருகச் செய்துள்ள காட்சியாக அமைந்திருந்தது.

You might also like