150 வருட பொலிஸ் வரலாற்றில் மிக நீண்ட பெயர் கொண்ட இலங்கை அதிகாரி!

மிக நீண்ட பெயர் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி தனது பெயரில் 14 பெயரை கொண்டன் மூலமே இந்த பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

வழக்கமாக இடமாற்றங்களை அறிவிக்கும் பொலிஸ் அறிக்கையின் ஊடாக இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்மைய அத்தியட்சகர் ஹக்மன திஸாநாயக்க வாசல பண்டார அமுனுகம விஜேரத்ன குணதிலக்க ரஞ்சனாயக்க பண்டாரலாகே ஹக்மன வலவ்வே அனுருந்த பண்டார ஹக்மனஎன்பதே அவருடைய பெயராகும்.

பொலிஸ் தலைமையக தகவல்களுக்கு அமைய ஹக்மன என்ற குறித்த அதிகாரி, கம்பொலவில் இருந்து எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

150 வருட இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில் ஹக்மன என்ற தந்தையின் பெயருடன் சேர்த்து 13 பெயர்களுடன் உலகின் மிக நீண்ட பெயர் கொண்ட அதிகாரியாக அவர் பெயரிடப்பட்டுள்ளது.

ஹக்மன என்ற 14 பெயர்களை விடவும் 28 பெயர்களை கொண்ட அதிகாரி ஒருவர் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் என்ற மாநிலத்தில் வாழ்கின்றார். எனினும் அவர் இடையிலேயே குறித்த பெயர்களை சேர்த்துள்ளார்.

எனினும் இலங்கை பொலிஸ் அதிகாரியின் பெயர் அவரது பிறப்பு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like