யாழில் A – 9 வீதியில் உள்ள பிரதான பாலங்களில் உடனடி மாற்றம்..!

யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய இரு பாலங்களில் அதிரடியாக மாற்றத்தினை கொண்டுவர தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் A-9 வீதியின் முக்கிய பாலங்களான கைதடி மற்றும் நாவற்குழி பாலங்களிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

இவ்வாறு குறித்த பாலங்கள் கொங்கிறீட் பாலங்களாக மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த பாலங்களில் மழை மற்றும் பனிக்காலங்களில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்போது அதில் பயணம் செய்யும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதற்காக தற்காலிக பலத்தினை அதன் அருகில் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

மேலும் பல கனரக வாகனங்கள் தற்போது அந்த பாலங்களினூடாக செல்வதால் அதில் உள்ள இரும்பு தகரங்கள் கழன்று போகும் நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like