க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில்.!

2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் தெரிவித்தார்.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை, 5669 நிலையங்களில் நடைபெற்றது.

கடந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்காக சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

You might also like