பெண்கள் தினத்தில் உடைந்த பல்லுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண்

உலக பெண்கள் தினமான நேற்று ஐந்து பேரினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் தாக்குதலில் உடைந்த பல்லுடன் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கம்பளை தெல்பிட்டிய வத்தஹேன பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த பெண் கிராம சபை வீதி வழியாக சென்றுக் கொண்டிருந்த போது 20 இளைஞனுடன் இணைந்து மூன்று பெண்கள், கை, கால்களில் தாக்கியதுடன் கற்களாலும் தாக்கியதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தாக்கப்பட்டுள்ளார்.

தலைமுடியை பிடித்துக்கொண்டு முகத்திலும் மார்பிலும் வாயிலும் தாக்கியதாகவும் இதனால், தனது பல் உடைந்து போனது எனவும் பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத் குறித்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like