கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சதுரங்கப் போட்டிகள்

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 4ஆம்,5ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியானது 7வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது, 17வயது, 19 வயது, 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என பதினாறு பிரிவுகளாக நடைபெற்றது.

7வயது, 9வயது, 11வயது பிரிவுகளில் முதலாம் இடம்பெற்றவருக்கு 2500 ரூபாவும், 2 ஆம் இடம்பெற்றவருக்கு 1500 ரூபாவும், 3 ஆம் இடம்பெறுபவருக்கு 1000ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.

ஏனைய வயதுப் பிரிவுகளில் முதலாம் இடம்பெற்றவருக்கு 5000 ரூபாவும், 2ஆம் இடம்பெற்றவருக்கு 3000ரூபாவும் 3ஆம் இடம்பெற்றவருக்கு 2000 ரூபாவும் பணப் பரிசில்களாக வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்போட்டியில் 4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாகப் பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

You might also like