மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

கிளிநொச்சியில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர் பெண்களின் வாழ்வியல்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒத்திகைகளும் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு குறித்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீள்விழி பெண்கள் அமையத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினப் பெண்களின் வாழ்வியல் என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளன.

இந்நிகழ்வில் காணாமல் போனவர்களின் உறவுகள் பெண்கள் அமைப்பினரின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

You might also like