இரணைமடுவில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்..!

70 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் விமான ஒடுதளம் அமைந்திருந்த பிரதேசத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

1.6 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இரணைமடு விமான ஒடுத்தளம் நீளத்தை 3 கிலோ மீற்றர் நீளமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

You might also like