எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள்! அறுபது வயது தாயின் குமுறல்

2006-06-26ம் திகதி கிளிநொச்சியிலிருந்து குடத்தனைக்கு வருவதற்காக முகமாலைபேரூந்தில் ஏறிய எனது மகன் இன்று வரை வீடு வரவில்லை.

நான் எல்லாகோயில்களுக்கும் சென்று வருகின்றேன். எல்லோரும் சொல்கின்றார்கள் மகன் உயிரோடுஇருக்கிறான் என்றே. எனவே காத்திருக்கிறேன், நான் அவனை பார்த்துவிட்டேஉலகத்தை விட்டுச் செல்வேன் என அறுபது வயது தாயான வடிவேல் புஸ்பராணி கண்ணீருடன்தனது காத்திருப்பின் கதையை கூறினார்.

இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் 18வது நாளாக இரவு பகலாக தொடர்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட வடிவேல்புஸ்பராணி தனது மகன் வடிவேல் நிவேதன் காணாமல் ஆக்கப்பட்டது பற்றி குறிப்பிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

25-06-2006 நானும் எனது மகனும் அப்போது 19 வயது, கிளிநொச்சி உதயநகரில் உறவினர்வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தோம். அன்று மாலையே நான் மீண்டும் யாழ்ப்பாணம்குடத்தனைக்கு திரும்பி விட்டேன்.

நான் திரும்பும் போது மகன் என்னிடம் அம்மாநீங்கள் போங்கோ, நான் நாளைக்கே (26) வந்து விடுகிறேன், பயப்பட வேண்டாம் எனக்கூறி அனுப்பி வைத்தான். ஆனால் அவன் கூறிய அந்த நாளைக்காக நான் இன்று வரைகாத்திருக்கிறேன் .

இனியும் காத்திருப்பேன், அவன் வருவான் உயிரோடுதான்இருக்;கிறான் என கண்ணீர் மல்க தெரிவித்த புஸ்பராணி.2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் மகன்பிடிக்கப்பட்டிருந்தாலும் அவன் 2009ற்குள் உதயநகரில் உள்ள உறவினர்களுடன்தொடர்புகளை மேற்கொண்டிருப்பான். அல்லது வீட்டு முகவரிக்கு கடிதம் மூலம்தொடர்பு கொண்டிருப்பான்.

எனவே உறுதியாக நான் நம்புகிறேன், மகன் முகமாலையில்வைத்தே காணாமல் போய்யிருக்கிறான். உதயநகரில் இருந்த உறவினர் ஒருவர் எனதுமகனை முகமாலை நோக்கி பயணித்த பேரூந்தில் ஏற்றி விட்டுள்ளார். அதன் பின்னர்எந்த தகவலும் இல்லை.

நான் இதுவரை மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், பொலிஸ்,இராணுவம் என பதிவுகளை எல்லா இடங்களிலும் மேற்கொண்டு விட்டேன். இப்பொழுதுமகனுக்காகவே காத்திருக்கிறேன்.

அவனை பார்த்து விட்டால் போதும் நான்சென்று விடுவேன். அவனுக்காகவே இந்த அறுபது வயதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு வருகிறேன்.

மகனை பார்க்க வேண்டும்,ஒருதடவையாவது பேச வேண்டும், கவனமாக போங்கோ நான் வந்து விடுவேன் என்று25-06-2006 சொன்ன வார்த்தைகள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கிறது எனஅழுதப்படியே கூறி முடித்தார் வடிவேல் புஸ்பராணி.

 

You might also like