கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்கு சுமந்திரனே காரணம்.!

16 பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளையும், தமிழ் தலைவர்களையும் அது சார்ந்த அரசியல் தலைமைகளையும் ஒற்றுமையின்மையாக உடைப்பதற்கு அரசின் மறைமுகமான முகவராக செயற்படுபவர் சுமந்திரன் என்பதை தானே தனது கருத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார் என சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

போராட்ட காலங்களில் பதுங்கியவர்கள் தங்களை தற்காலத்தின் விடிவெள்ளிகள் போல பாசாங்கு செய்வது வேடிக்கையளிக்கிறது.

தாங்கள் மட்டும் தான் மக்கள் பிரதிநிதியா? தங்களுக்கு மக்களுக்காக கதைக்கும் உரிமை இருப்பது போல ஏனைய 11 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்காக கையெழுத்து போடும் உரிமை இருக்கிறது. அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். ஆரம்ப கால அகிம்சை போர் முதல் அதனூடாக தூண்டப்பட்ட இளைஞர்களின் விடுதலைக்கான ஆயுத போர் என தொடர் போராட்டங்கள் பெற்றுத்தராத தீர்வுகளை சுமந்திரனின் சர்வதேச போக்குகள் பெற்றுத்தருமாம் என தானே தனது சுய புலம்பலை புலம்பும் நிலைக்கு சுயபுராணம் சுமந்திரன் முயற்சி செய்வது வேடிக்கைக்குரியது.

புதிய புலிகள் தொடக்கம் போராட்டங்கள் தீவிரம் அடையும் காலப்பகுதியில் அதாவது 1980 தொடக்கம் 2009 வரைக்கும் பதுங்கி இருந்தவர் சுமந்திரன் ஐயா. தாங்கள் 1964 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சின்ன பொடியன் என மந்திர பாசாங்கு செய்ய வேண்டிய தேவை உமக்கு இல்லை. உயர்கல்வியை இலங்கையில் கற்று இருந்தால் சுமந்திரன் படித்தவர் என கூறமுடியும், 1983 கலவரத்திலும் படித்து சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என பலர் தமது வாழ்க்கையினை துறந்து இனத்தின் விடிவிற்காக தமது உயிர்களை துறந்த வரலாற்றை தாங்கள் கற்க வேண்டும்.

அதனை விடுத்து அந்த காலப்பகுதியில் இந்தியாவில் பதுங்கியிருந்து படித்து இலங்கை சட்ட கல்லூரியின் ஊடாக வெளிவந்த தங்களின் கருத்துக்களை தமிழ் சமூகம் ஏகோபித்து ஆதரவளிக்க போவதில்லை.

எமது தலைவர்கள் சிலர் ஆரம்பகால போராட்ட வாழ்க்கை அதனூடான சர்வதேச பேச்சு வார்த்தைகள், வெளிநாடுகளில் செங்கம்பள வரவேற்பு அளிக்கும் அளவிற்கு சர்வதேசத்திற்கு எமது பிரச்சனைகளை கொண்டு சென்றார்கள்.

ஆனால் நல்லாட்சி அரசுடன் கைகோர்த்தும், புலம்பெயர் தேசங்களின் தூதுவர்களுடன் எமது தமிழ் சமூகத்தினை நசுக்கும் செயலிலும், இலங்கையில் ஊடகங்களின் முன்னிலையில் தான் மக்களுக்காக செயற்படுவது போலான கருத்துக்களை சொல்வது மற்றும் ஏனைய தலைவர்களை விமர்சிப்பது தங்களின் அரசியல் விபச்சார தன்மையினை வெளிக்காட்டுகிறது.

You might also like