வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு : பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியா சாந்தசோலை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையமோன்றில் நேற்றிரவு (10.08.2018) திருட்டுச்சம்பவமோன்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாந்தசோலை கிறசர் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினை நேற்றிரவு வழமை போன்று மூடி விட்டு வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் சென்றுள்ளார். இன்று காலை 5.30 மணியளவில் வியாபார நடவடிக்கைக்காக வர்த்தக நிலையத்தினை திறந்த சமயத்தில் வியாபார நிலையம் உடைக்கப்பட்டு பால்மா பொருட்கள், பணம் என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா பொலிசார் திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

You might also like