யாழில் கணவன் மீது அசிட் வீசிய மனைவி : வெட்டுக்காயங்களுடன் கணவன் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவி மீது அசிட் வீச கணவன் முற்பட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அசிட் போத்தலை பறித்து கணவன் முகத்தில் எறிந்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் காயமுற்ற கணவன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருப்பினும் குறித்த நபரின் கண் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும், அத்துடன் அவருடைய கையில் கத்தி வெட்டும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like