வவுனியாவில் முச்சக்கரவண்டியுடன் பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்து

வவுனியா தினசரி சந்தை உள்வட்ட வீதியில் இன்று (11.08.2018) காலை 11.00மணியளவில் முச்சக்கரவண்டியுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

சதோச வர்த்த நிலையத்திற்கு அருகே சந்தை உள்வட்ட வீதியிலிருந்து ஹோரவப்போத்தானை வீதிக்கு ஏற முற்பட்டமுச்சக்கரவண்டி மீது ஹோரவப்போத்தானை வீதியிலிருந்து சந்தை உள்வட்ட வீதிக்குள் நூழைந்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு சிறிதளவில் சேதம் ஏற்பட்டதுடன் விபத்து காரணமாக இவ் வீதியுடாக போக்குவரத்து 10நிமிடங்களாக ஸ்தம்பித்தது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட நகரசபை ஊழியர்களும் பொதுமக்களும் விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து வாகனத்தினை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like