வவுனியாவில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை!! மீறுவோர் மீது நகரசபையினர் நடவடிக்கை

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அங்கிருந்து அகற்றும் பணியினை வவுனியா நகரசபையினர் இன்று (11.08.2018) காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஹொறவப்பொத்தான வீதி , தினசரி சந்தை வீதி போன்ற பகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே இன்று காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி வருவது தொடர்பாக அவ்விடத்தில் நடவடிக்கையினை மேற்கொண்ட நகரசபை ஊழியர்களிடம் வினாவிய போது,

அண்மைகாலமாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வருவபர்களை அங்கிருந்து வெளியேறுமாறு முன்னறிவித்தல் வழங்கப்பட்டு வந்துள்ளது. நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு  நகரசபையினால் ஒதுக்கப்பட்ட  இடங்களில் அவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மாறாக பொதுமக்கள் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்கள்ளாகி வருகின்றமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

You might also like