மாணவர்களின் தாகம் பல்கலைக்கழகம் என்னும் உயர்ந்த இலட்சியம்:எம்.எம்.ரதன்

ஒருவர் மனிதனாக வாழ்வதற்கு கல்வியே இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதோடு ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் இலட்சியமாக பல்கலைக்கழகத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இன்று காலை இடம்பெற்ற சமூக விஞ்ஞான மன்ற நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் தலைவர்கள் இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களும் தாம் கல்வி கற்கின்ற காலத்தில் இருந்தே இத்தகைய பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் காலத்துக்கு காலம் கொண்டு வரப்பட்ட யாப்புக்களே பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

கோல்புறுக் யாப்பு, மனிங் யாப்பு, மக்கலம் யாப்பு, டொனமூர் யாப்பு, சோல்பரி யாப்பு என்பவற்றோடு காலபோக்கில் முதலாம் குடியரசு யாப்பு, இரண்டாம் குடியரசுயாப்பு என்பனவற்றின் காரணமாக கல்வியிலும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய மாணவர்கள் நவீன இணையதள சாதனங்கள் காரணமாக முகநூல் பாவனை வேறு சாதன பாவனைகள் அதிகரித்தமையால் கல்வியில் அக்கறை செலுத்தும் தன்மை குறைவடைந்துள்ளது.

ஆயினும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி கல்வியில் என்றும் சாதனை படைகின்றமை விசேட அம்சம் ஆகும்.

கடந்த உயர்தர்பரீட்சை பெறுபேற்றில் கணித விஞ்ஞான கலைப்பிரிவுகளில் மாவட்ட நிலையில் முதலிடங்களை பெற்றவர்கள் இக்கல்லூரியில் கற்ற மாணவிகளே,

மேலும், எனவே இவற்றினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலும் இப்பாடசாலைகளின் மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம.ரதன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like