வவுனியாவில் தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று (12.08.2018) மதியம் 11.30மணியளவில் தனியார் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக சூடுவெந்தபுலவு பகுதியில் தரித்து நின்ற சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து தனியார் பேரூந்தின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி (23வயது மதிக்கத்தக்க  இளைஞன்) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நியுஸ்வன்னி செய்திகளுக்காக சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து தா.மு.சாதிக்

You might also like