சினிமா பாணியில் நடந்த கொடூர கொலைகள் – பொலிஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் கொலையாளி தாக்குதல்

அண்மையில் களுத்துறையில் சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளில் சில திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.

இந்த தாக்குதலை பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் அங்கொட லொக்கா என்பவர் வழிநடத்தியுள்ளார்.

சமயங் என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் தாக்குதலில் உயிரிந்திருந்தனர்.

பொலிஸ் சீருடை அணிந்து அங்கொட லொக்கா இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்திய வான் வண்டியில் அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் கிடைத்துள்ளன.

சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தியன் பின்னர், அங்கொட லொக்கா பஸ் உள்ளே சென்று சமயங் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திய பாதாள உலகக்குழுவினர் பயணித்த பஸ்ஸிற்கு, பாதுகாப்பு வழங்கும் வகையில் பொலிஸ் சீருடை அணிந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இருவர் பஸ்ஸிற்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்திய அனைத்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like