இறந்த குட்டியை கடலில் சுமந்து திரிந்த திமிங்கலம்…. ஆராய்ச்சியாளர்களின் அதிர வைக்கும் காரணம்

இறந்த தன் குட்டியை 17 நாட்களாக கடலில் சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது.

பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தனது இறந்த குட்டியை தூக்கி திரியும். ஆனால், இந்த திமிங்கலமானது புதிய சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். ஜூலை 24 அந்த திமிங்கல குட்டியானது மரணத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், எந்தவகையில் அது இறந்தது காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தனது குட்டி தண்ணீரில் மூழ்கிவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து இந்த திமிங்கலங்கள் உடலை அதற்கு தோன்றும் தருணம் வரை சுமந்து செல்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

You might also like