பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைத்தும் இலட்சியத்தை கனவாக்கிக் கொண்ட மாணவி..!

பல்கலைக்கழகம் செல்வதற்காக அனுமதி கிடைத்த போதிலும், ஆசிரியராக வேண்டும் என்ற இலட்சியத்தை கனவாகவே மாற்றிக்கொண்ட மாணவி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பொலன்னறுவை, தொப்பவேவா மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் தோற்றி, மாவட்ட மட்டத்தில் 29ம் இடத்தை பெற்றுக் கொண்ட பீ.எச்.பவந்தி விதுஷா என்ற மாணவி தொடர்பிலேயே தகவல்கள் வெளியாகியுள்ளன.

விதுஷா பெற்றுக் கொண்ட உயர்தர பெறுப்பேற்றுக்கு அமைய அவருக்கு பல்கழலைக்கழகம் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. பவந்தி விதுஷாவின் தந்தை நாள் சம்பளத்திற்கு கூலி வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வருகின்றார்.

அவருக்கு நிரந்தர தொழில் என்ற ஒன்று இல்லை, விதுஷாவின் தாய் செவிலிதாயாக வேலை செய்கின்றார். பவந்தியின் பெற்றோர்களின் சம்பளத்தை வைத்துக் கொண்டு அன்றாட தேவைகளையே நிறைவு செய்ய முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் விதுஷா இரவு நேரங்களில் குப்பி விளக்கை வைத்தே கல்வி கற்று வந்துள்ளார். பவந்தியின் நண்பர்கள், மேலதிக வகுப்புகளுக்காக செல்லும் பட்சத்தில் அவருக்கு வகுப்புக்குச் செல்ல கூட பணம் இருக்கவில்லை.

என்னுடைய அம்மா குழந்தைகளைப் பராமரித்தே என்னையும் என் சகோதரரையும் பார்த்து வருகின்றார். அப்பா கொண்டு வரும் பணம் சாப்பிடுவதற்கே சரியாக உள்ளது.

எனக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைத்தது. இருப்பினும் பெற்றோரிடம் பணம் இல்லை என்னை படிக்க வைப்பதற்கு,

எனது கனவு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆசிரியராக வரவேண்டும் என்பதே தனது இலட்சியம் என குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

You might also like