வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் ஊழியர்களை பொலிசார் அச்சுறுத்தி வருகின்றனர்

வடகிழக்கு புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் தமக்கு நிரந்தர நியமணம் வழங்கவேண்டும் தொழிலாளர் சட்ட திட்டத்திற்கமைய அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவகள் வழங்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10.03.2017) காலை 6.00மணியிலிருந்து தமது பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருவதாகவும் இதனிடையே இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்ற பொலிசார் அவர்களை அச்சறுத்தியதுடன் பணிக்கு வருமாறும் அழைத்து வருவதாகவும் தமது பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரே தமது பணிப்புறக்கணிப்பு தொடர்பாக முன்னறிவித்தினை வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இன்று பிற்பகல் 2.30மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடகிழக்கு புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் ஒன்றியத் தலைவர் திரு எஸ். ஜே றோகான் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக நாம் எமது நிரந்தர நியமணத்திற்குப் போராடி வருவதாகவும் பல போராட்டங்களை மேற்கொண்டும், பல வாக்குறுதிகள் எமக்கு வழங்கப்பட்டும் அது நிறைவேற்ற வில்லை இதன் காரணமாகவே தாம் இன்றைய பணிப்பறக்கணிப்பினையும் மேற்கொண்டு வருவதாகவும் தமது போராட்டத்தினை இலங்கை புகையிரதக்கடவைக்காப்பாளர்கள் ஒன்றியத்திற்கும் தெரிவித்துள்ளதாகவும் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றோம் என்றும் மேலும் தெரிவித்தார்.

You might also like