சற்று முன் வவுனியா கூமாங்குளத்தில் கிணற்றிலிருந்து 5வயதுடைய குழந்தையும் தாயும் சடலமாக மீட்பு

வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு அருகே இன்று (15.08.2018) காலை 10.00மணியளவில் தாயும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் 5வயது, 7வயதுடைய மகனுடன் தாயார் அயலவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் 5 வயதுடைய மகனையும் குறித்த பெண்ணையும் காணவில்லை என குறித்த அயலவரின் வீட்டார் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33வயதுடைய தாயும்,  5வயதுடைய குழந்தையுமே சடலமாக மீட்கப்பட்டதாகவும் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவலை வழங்க முடியுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர் , பண்டாரிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நியுஸ் வன்னி செய்திகளுக்காக சம்பவ இடத்திலிருந்து வரதராசா பிரதீபன்

You might also like