வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக பலி

வவுனியா பறநாட்டன்கல் பகுதியில் நேற்று (16.08.2018) காலை 10.00 மணியளவில் புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பறநாட்டன்கல் புகையிரதக்கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தன.

இவ் விபத்தில் காரணமாக 15நிமிடங்கள் தாமதித்தே புகையிரதம் பயணித்ததாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

You might also like