வவுனியாவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

நிலத்தடி நீரை சுத்தமான குடி நீராக மாற்றும் RO Plant இயந்திரங்கள் பல வவுனியா மாவட்டத்தில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டம் நேற்று (16.08.2018) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 5000 பேர் நன்மையடையவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம் இரண்டு, ஆனைவிழுந்தான், நேரியகுளம், பெரிய உலுக்குளம், பெரியகுளம், ஈச்சங்குளம், நந்திமித்ரகம, போகஸ்வெவ மற்றும் கற்குளம் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரில் காபன், இரும்பு மற்றும் அயன் தாதுப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அப்பிரதேசத்தில் அதிகம் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் நிலத்தடி நீரை சுத்தமான குடி நீராக மாற்றும் RO Plant இயந்திரங்கள் பல வவுனியா மாவட்டத்தில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

மேலும், நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், முத்தலிப் பாவா பாருக், பிரதேச சபை உறுப்பினர் மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மாகாண பொது முகாமையாளர் பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நியுஸ்வன்னி செய்திகளுக்காக தா.மு.சாதிக்

You might also like