வவுனியாவில் அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவ முகாம்

வவுனியாவில் கடந்த ஒருவாரமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன் இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்கா விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பதில் அதிகாரி றொபேட் ஹில்டன் இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாமினைப்பார்வையிட்டுள்ளார்.

இவ் மருத்துவ முகாமில் பொது சுகாதாரம், பல் சுகாதாரம், குழந்தை மருத்துவம் மற்றும் பொறியியல் திட்டங்கள், பொருள் நிபுணர் பரிமாற்றங்கள் இலவச மூக்குக்கண்ணாடிகள், ஏனைய வியாதிகளுக்கான மருந்துகள் என்பன பரிசோதனை மேற்கொண்டு வழங்கி வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். நாளையுடன் இத்திட்டம் நிறைவிற்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like