வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

வவுனியா செலழிஹினிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.

வவுனியா நாமல்கம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதியை போகஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like