வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் 

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிரான சுமார் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை இன்று (20.08.2018) காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் , கணக்காய்வாளர் நாயகம் அவர்களிடம் ஒப்படைத்தாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச காணிகளை கைமாற்றுதலில் இடம்பெற்ற முறைகேடுகல் , கிரவல் அனுமதியில் நிதி மோசடி , வீட்டுத்திட்ட தெரிவில் இடம்பெற்ற மோசடி , வவுனியா வடக்கில் அமைந்துள்ள இரு சமூர்த்தி வங்கியும் முழு மீளாய்வு செய்ய வேண்டும் எனேனில் அவற்றிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறான 55 குற்றசாட்டுக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆவணங்களை நான் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி ஜெயசேகரா அவர்களிடமும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெளரவ வஜிர அபேவர்தன அவர்களிடமும் கணக்காய்வாளர் நாயகம் திரு.குணவர்தன அவர்களிடமும் கையளித்தேன்.

இதன் போது அவர்கள் அனைவரும் எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாக உறுதிமொழியளித்தனர் என தெரிவித்தார்.

You might also like