வவுனியா ஈஸ்வரிபுரம் கிராம மக்களுக்கு மதுபாவனை தொடர்பான கருத்தமர்வும் கலந்துரையாடலும்

“எங்களை ஏழையாக்கி ஆண்களை பாலியல் பலவீனமடையச் செய்யும் சாரயப்பாவனையை இல்லாமல் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான கருத்தமர்வும், கலந்துரையாடலும் இன்று (20.08.2018) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது

இந் நிகழ்வில் வளவாளராக பங்கெடுத்த மதுபானம் மற்றும் போதைப்பொருள் நிலைய மாவட்ட இணைப்பாளர் அருளானந் கருத்து தெரிவிக்கையில்,

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சாரயப்பாவனை தொடர்பாக எண்ணப்பாடு மாறவேண்டும். உண்மையிலே உழைக்கின்ற பணத்தை திருடுகின்ற சாராயக் கம்பனிகளின் வியாபாரத்தந்திரங்களுக்கு ஏமாறாத புத்திசாலித்தனமான இளைஞர்கள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர் மதுரதீபன் பங்கெடுத்ததுடன் 150 ற்கு மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் ஆர்வத்துடன் கிராமத்தில் மாற்றத்தை நிகழ்த்த தங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியிருந்தனர்.

 

 

You might also like