கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் இறால் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்க சென்ற 32 வயது நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிகிழமை) மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இறால் பிடிப்பதற்காக சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள கடல் நீரேரி பகுதிக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.

மாலை வேளையாகியும் குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்களால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் சுண்டிக்குளம் கடல் நீரேரியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரும் நீதவானும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி கண்ணகி நகரை சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like