இனங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா பள்ளிவாசலுக்கு விஜயம்

வவுனியாவில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (22.08.2018) காலை 7.15 மணிக்கு வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இப் பெருநாள் தொழுகையினையும் யும்மா பிரசங்கத்தினையும் மௌலவி அமீர் கம்சா அவர்கள் நடாத்தியிருந்தார்.

இனங்களுக்கிடையே நல்லினங்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வில் வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களும் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் , வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலய பொலிஸாரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like