செட்டிக்குளத்தில் மக்களுக்கு இடையூராக காணப்படும் கள்ளுத்தவறணையினை அகற்ற அதிகாரிகள் அசமந்தப்போக்கு

வவுனியா செட்டிக்குளம் , துட்டுவாகை பகுதியில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூராக காணப்படும் கள்ளுத்தவறணையினை அகற்றுமாறு மதுவரித்திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் அதிகாரிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக  செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் யேசுதாசன் டெல்சன் விசனம் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மது, மற்றும் புகைத்தல் பாவனையினை தடை செய்யும் திட்டத்தினை செயற்படுத்தும் முதற் கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்ற செட்டிக்குளம் பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில் குறித்த இரு கள்ளுத்தவறணையிணை ஒரு மாத காலத்திற்குள் அகற்ற வேண்டுமேன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ் விடத்திலிருந்து அகற்றி குடியிருப்புக்கள் பகுதியிலிருந்து 500மீற்றர் தொலைவாக அமைக்குமாறு மதுவரி திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ள போதிலும் குறித்த கள்ளுத்தவறணையினை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது மதுவரித்திணைக்கள அதிகாரிகள் அசமந்தபோக்காக செயற்படுவதாகவும்  மேலும் தெரிவித்தார்.

You might also like